(Mohamed Nizous)
தீ
++
சீதனம் கொண்டு வரா
சிறுக்கி மருமகள்மார்
சாதம் வடிக்கையில்
சமைலறையில் வெடிப்பது.
தீ
+++
நானாமார் செய்கின்ற
நாடறிந்த கடைகளிலே
தானாக பற்றுவது
தலையில் பூ சுற்றுவது.
நெருப்பு
+++++++
சாம்பலான பின்னாலே
சோம்பலோடு ஆராய்ந்து
வீம்பாக அறிக்கை வர
விரக்தி மனதில் பற்றுவது.
தீ
+++
'கண்டி'க்க ஆளில்லா
காவாலிகள் ஒன்று சேர்ந்து
கிண்டி விடும் இனவெறியால்
கிளர்ந்தெழுந்து பற்றுவது.
தீ
+++
ஏழைகளின் வயிற்றில்
எப்போதும் பற்றுவது
கோழைகள் கோபத்தில்
கொழுத்தப் பற்றுவது.
'தீ'ர்க்கப் படாத
'தீ' யோரின் குழுக்களினால்
'தீ'விலே இனவாதம்
'தீ'ராமல் எரிகிறது

