நிந்தவூர் அல்-மினா விளையாட்டுக் கழகத்தின் மீள் புணரமைப்புக் கூட்டம்.

Written By avathani Media Network on Sunday, November 27, 2016



(நிந்தவூர்.
முஹம்மட் ஜெலீல்)

நிந்தவூர் மினா விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாகிகள் தெரிவுக் கூட்டம் இன்று 26-11-2016 சனிக்கிழமை நிந்தவூர்-09 அல்-மினா வித்தியாலய மண்டபத்தில் பி.ப. 05:00 மணியளவில் கழகத்தின் தலைவர் கே.எம் ஷாபிர் அவர்களின் தலையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் புதிய நிருவாகிகளை தெரிவுசெய்யும் பொறுப்பை கழகத்தின் தலைவர் கே.எம். ஷாபிர் அவர்கள் எமது அழைப்பை ஏற்று வாருகைதந்த நிந்தவூர்-9 பிரிவு கிராம உத்தியோகத்தர் எ.ஆர்.எம். வசீம் அவர்களின் பொறுப்பில் தெரிவுசெய்யும்படி தலைவர் கூறியதையடுத்து கழக நிருவாகிள் தெரிவுசெய்யப்பட்டு கழக உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இக்கழக தெரிவைத் தொடர்ந்து மாகாண சபைத் உறுப்பினர் எ.எல்.தவம் அவர்கள் எமது கழகத்துக்கு வழங்கிய சுமார் 20,000ரூபாய், பண ஒதுக்கீட்டில் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கினார்.

மேலும் எமது கழகத்திக்கு உதவிய மாகாண சபைத் உறுப்பினர் "தவம் அவர்களுக்கு எமது கழகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி நிகழ்வு இனிதாய் நிறைவுபெற்றது.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.