மௌனமாகப் போராடும் இலங்கை முஸ்லீம்கள்

Written By avathani Media Network on Wednesday, November 9, 2016

இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள் பல்லின சமூக மக்களிடையே மிகுந்த மரியாதைக் குரியவர்களாகவும் கண்ணிய மிக்க வர்களாகவும் தங்களது கலாச்சாரம் பண்பாடு இஸ்லாமிய விழுமியங்களை இழக்காது சிதறுண்ட சிறுபான்மையாக இலங்கை மண்ணில் வாழ்வது உலகின் ஏனைய சமூகங்களுக்கு முன் உதாரணமாகும் 

தேசிய அரசியல் களத்தின் தேவை கருதி முஸ்லிம் சமூகத்தின் அனைத்து பண்புகளையும் இஸ்லாமிய காலாச்சார விழுமியங்களையும் சிதறடித்து குருந்தேசத்திற்குள் சுருக்கி முடக்க்கும் முயற்சியை பௌத்த தேசிய வாத அரசியல் வாதிகளின் சூழ்சிகள் மூளை முடுக்களில் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருகின்றன. 

அமைதியையும் சகிப்புத் தன்மையுடனும் நிதானத்துடனும் பொறுமையுடனும் முஸ்லிம்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றிநடை போடுகின்றனர் இஸ்லாத்தின் அடிப்படையிலான இராஜதந்திர நகர்வுகளை மிக நுணுக்கமாக மேற்கொண்டு வெற்றி கொண்டிருகின்றனர் .

முஸ்லிம் சமூகத்தின் அமைதியானதும் உறுதியானதுமான இந்தப் போராட்டம் எப்படி வெற்றி பெற்றது என்பதே சிங்கள சமூகத்தின் சதிகாரர்களை ஆட்டங்காணச் செய்திருக்கிறது .

முஸ்லிம்களின் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் எதிரிகளாக மாறி இருந்த போதிலும் கூட ஒரு பலமிக்க அரசாட்சியை புரட்டிப் போடும் அளவு முஸ்லிம்களிடத்தில் என்ன பழம் இருந்தது என்றால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாகும் இந்த சமூகத்தோடு இரக்கமுள்ள இரட்சகன் இருக்கிறான் என்ற உண்மை மட்டும் இப்போது புலப் பட்டிருகிறது 

அழிவின்றி ஆரவாரம் இன்றி அடுத்த சமூகத்தின் ஆதரவுடன் இதனை முஸ்லிம் சமூகம் செய்து முடித்தது இப்படியான ஒரு தேசத்தில் சிறுபான்மையாக வாழும் ஒரு சமூகம் எப்படி போராடவேண்டும் என்பதை உலகிற்கு பாடம் எடுத்திருகிறது இலங்கை முஸ்லிம் சமூகம் 

முஸ்லிம் களை துடைத்தெறிய தீட்டிய அனைத்து திட்டங்களும் இதன் பின்னே தவிடு பொடியானது சிங்கமாய் சீறியவர்கள் பூனையாய் மாறினார்கள் இதைச் சாதிப்பதற்கு மக்களைக் கூப்பிட்டு யாரும் காட்டுக் கூச்சல் போடவில்லை பொறுமையோடு எதிரியையும் நண்பனாக்கி அமைதியாகச் சாதித்தது

இன்றைய நிலையில் கதானயர்களாக துடிக்கும் சில முஸ்லிம் இயக்கங்கள் முஸ்லிம் சமூகம் அடிமாயகி விட்டதாகவும் அவர்கள்தான் வீரர்கள் என்றும் காட்டுக் கூச்சல் போட ஆரம்பித்திருகிறது 

சரியாகச் சிந்திக்கத் தெரிந்தவன் இவ்வாறு கூற மாட்டான் இப்போதுதான் முஸ்லிம் சமூகம் கட்டிய கப்பலில் ஓட்டை விழுந்துள்ளது அபாயமும் முஸ்லிம் சமூகத்தின் மௌனமாய் மேற்கொண்ட போராட்டமும் 
வாய்வீச்சினால் அழிந்து போகும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது .

முஸ்லிம்களின் மௌனமே ஞ்சானசாறரை சிறைவரை அழைத்துச் சென்றது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.