அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீலின் மனைவி பாத்திமா நஜா காலமானார்

Written By avathani Media Network on Wednesday, November 9, 2016



(எம்.எஸ்.எம். ஸாகிர்)

பிறை எப்.எம். அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீலின் மனைவி பாத்திமா நஜா இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை காலமானார்.

உயர் குருதி அமுக்கம் அதிகரித்தன் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் மாற்றப்பட்டு, அவர் மரணமாகியுள்ளார். கர்ப்பவதியான இவருக்கு, இவ்வாரம் பிள்ளை கிடைக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர், நைரோஸ் மௌலவியாவின் மகளும் மௌலவி நுஹ்மான் (நளீமி) ஆசிரியர் மற்றும் சிராஜ் ஆசிரியரின் மருமகளும் ஆவார்.

ஜனாஸா இன்று (08.11.2016) சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.