சம்மாந்துறை, ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா.

Written By avathani Media Network on Friday, November 11, 2016

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சம்மாந்துறை, |ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா நேற்று வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் எம்.விஜயக்குமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் கே.கலையரசன், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் டொக்டர்.எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர், சட்டத்தரணி.எம்.எம்.சஃபீர், இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.எம்.பசீர், ஏ.எம்.தபீக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாடசாலையில் பல்துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களுக்கு வழி காட்டிய ஆசிரியப் பெருந்தகைகளையும் பாராட்டி தங்கப்பதக்கம், நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்ததோடு, பாடசாலையின் வளர்ச்சியில் அக்கரை கொண்டு உழைத்துவரும் அதிகாரிகளான பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் டொக்டர்.எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, பிளேன் சிறிலங்கா நிறுவன இணைப்பாளர் எஸ்.இரவிச்சந்திரன், அரசியல்வாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர் கே.கலையரசன் ஆகியோர் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'வெறுமனே நல்லாட்சி வந்து விட்டது என்பதை மட்டும் நம்பி, தமிழ், முஸ்லிம் சிறுபாண்மைச் சமூகம் எங்களுக்குள் பிரிவினை வாதத்தை ஒருக்காலமும் அனுமதிக்க முடியாது. விட்டுக் கொடுப்போடும், புரிந்துணர்வோடும் தழிழ், முஸ்லிம் உறவு கட்டியெழுப்பப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகக்குறைந்தது எங்களுக்கு எதிரான பௌத்த கடும் போக்குவாத எரிச்சலான சக்திகளுடைய ஆபத்தான சதிகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்காக தமிழ், முஸ்லிம் சமூகம் தங்களுடைய கசப்பான உணர்வுகள் எதுவானாலும் அவைகளைப் புறந்தள்ளி விட்டு, விட்டுக் கொடுப்போடும், துணிவோடும் இந்த உறவைக் கட்டியெழுப்புகின்ற காலம், தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது. இதற்காக அரசியல் தலைமைகள் பாடுபட வேண்டும்.' எனத் தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் கே.கலையரசன் கருத்துத் தெரிவிக்கையில்:-'நாங்கள் எதிர்காலத்தில் இந்த சமூகங்களை இணைக்கக் கூடிய விதத்தில் செயற்பட வேண்டும். எங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் பேசித்தீர்க்க வேண்டும். நிச்சயமாக இந்த இரண்டு சமூகங்களும் பிரிந்தால் மாற்றுச் சமூகத்தினருக்கு வாய்ப்புக் கொடுக்கின்ற ஒரு இனமாக நாங்கள் ஆகிவிடுவோம்' எனத் தெரிவித்தார்.

















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.