முல்லை முஸ்ரிபாவின் நூல்களின் வெளியீட்டு விழாவும், கையளிப்பு வைபவமும் (20-11.2016)

Written By avathani Media Network on Friday, November 11, 2016

முல்லை முஸ்ரிபாவின் ‘’ எஞ்சியிருக்கும் சிறகுளால் பறத்தல்’’ எனும் நூலின் வெளியீட்டு விழாவும், ‘என் மனசின் வரைப்படம்’ நூலின் கையளிப்பு நிகழ்வும், எதிர்வரும் 20.11.2016 ஞாயிறு அன்று காலை பத்து மணிக்கு கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறும்

பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் கல்விப் பீடத் தலைவர் பேராசிரியா; சோ.சந்திசேகரம் கலந்துக் கொள்வார்.

‘’எஞ்சியிருக்கும் சிறகுளால் பறத்தல்’’ நூலின் முதற் பிரதியினை இலக்கியப் புரலவர் அல்ஹாஜ் ஹாஸிம் ஒமர் பெற்றுக் கொள்ளுவார்.

என் மனசின் வரைப்படம்’ கையளிப்பு பிரதி அல்ஹாஜ் வே.எம். இப்றாஹிம் அவர்களுக்கு (ஸ்தாபகர், இப்றாஹிமியா தொழில் நுட்பக் கல்லூரி ) கையளிக்கப்படும்.

தொடக்கவுரையை மேமன்கவி நிகழ்த்த, வெளியீட்டுரையை சிராஷ் மஷ்ஹூர் மற்றும் கையளிப்பு உரையை கலாநிதி ந. ரவீந்திரன், முன் ஆகியோர் முன் வைப்பார்கள்.

வாழ்த்துக் கவிதையை முல்லைத்தீபன் வழங்குவார்.

ஏற்புரையை நூலாசிரியர் முல்லை முஸ்ரிபா நிகழ்த்துவார்.

இவ்விழாவில் சிறப்பு அதிதிகளாக கலாநிதி எஸ்.எம்.பராஸ், (பிரதிப் பொது முகாமையாளர்,, (Fashion Bag) ) ஜே.எம். முகம்மட் சாஜித், ( பணிப்பாளர் (Love & Love) ), தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.எம்.அப்துல் ரஹ்மான், அல்ஹாஜ் என்.ஹசன், (உரிமையாளா; (Tamco International) ) ஆகியோர் கலந்துக் கொள்வார்கள்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.