பாலர் பாடசலை நிகழ்வில் பிரத அதிதியாக பொறியியலாளர் அப்பதுர் ரஹ்மான் கலந்து கொண்டார்!

Written By avathani Media Network on Saturday, October 29, 2016

(NFGG ஊடகப் பிரிவு)

காத்தான்குடி - பாலமுனை இக்றாஹ் பாலர் பாடசலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பொறியியலளர் அப்துர்ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இக்ரா பாலர்பா டசாலையின் தலைவரும் NFGG யின் பாலமுனை பிரதேச செயற்குழு உறுப்பினருமான AM சியாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் மாணவர்களினால் உடற்பயிற்சி கண்காட்சி ஒன்றும் நடாத்தப்பட்டது.

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இந்நிகழ்வில் உரையொன்றை ஆற்றியதோடு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

அத்தோடு இப்பாடசாலைக்கென அன்பளிப்பு செய்யப்பட்ட கதிரைகளையும் பாடசாலையின் தலைமை ஆசிரியையிடம் அப்துர் ரஹ்மான் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக காத்தான்குடி பிரதேச UNP அமைப்பாளர் MHM முஸ்தபா அவர்களும், விசேட அதிதிகளாக NFGGயின் தலைமைத்துவ ஆலோசனை சபை உறுப்பினரும் ஆசிரிய ஆலோசகருமான MR.ஜவாத் BA, ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் MIA.முஸ்தபா, உதவிக்கல்வி பணிப்பாளர் IM.இப்ராஹிம் BA, அலிகார் வித்தியாலய அதிபர் HA.றஸாக் MA, அஷ்ரப் வித்தியாலய அதிபர் AM.அப்துர் ரஹ்மான் BA, உட்பட பாலமுனைப் பிரதேச பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பாலமுனைப் பிரதேச NFGG செயற்குழு உறுப்பினரான றபாய்தீன் உட்பட பலரும், மற்றும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.