பாலமுனை அஸ்றி அஸாம் எழுதிய 'இது ஒரு தருணம்' கவிதை நூல் வெளியீட்டு விழா.

Written By avathani Media Network on Sunday, October 30, 2016

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

பாலமுனை அஸ்றி அஸாம் எழுதிய 'இது ஒரு தருணம்' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று பாலமுனை இபுனுஷீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

கலாபூசனம் கவிஞர் பாலமுனை பாறூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் தேசியத் தலைவரும், வர்த்தகக் கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகரும், கனியவளங்கள் கூட்டுத்தாபனத் தலைவருமான எம்.ஏ.அப்துல்மஜீட், முன்னாள்; தென் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வீ.சீ.இஸ்மாயீல், அசோக் லங்கா நிறுவனத் தலைவர்சிராஸ் மீராசாஹீப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சுபைதீன் ஹாஜியார், சிரேஷ்டஊடகவியலாளர்களான ஏ.எச்.சித்தீக் காரியப்பர், ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, சுஹைப்.எம்.காஸீம் உள்ளிட்ட பலபிரமுகர்களும் இதில் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' 16 வருடங்களாக யாரும் பார்க்காமலிருந்த ஒலுவில்துறைமுகம்!, அந்தத் துறைமுகத்துடைய தாக்கம்!, மீனவர்களுடைய கஷ்டம்!, அதே போல அந்தப் பிரதேசமக்களுடைய பிரச்சினைகள்! இவை எல்லாவற்றிற்கும் இன்னும் ஒரு சில மாதகாலங்களிலும் ஒரு நிரந்தரமானதீர்வுக்காக சில வருடங்களுக்குள் விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு வேலைத் திட்டத்தை இந்தநல்லாட்சி அரசாங்கம் எடுத்திருக்கின்றது என்ற நல்ல செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்' எனத் தெரிவித்தார்.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.