உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பினை அதிகரித்தல் தொடர்பான மகளிர் செயலமர்வு.

Written By avathani Media Network on Monday, October 31, 2016


இலங்கை உள்ளுராட்சி மன்றங்களுக்கான சம்மேளனத்தின் அணுசரனையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிருக்கான செயலமர்வு ஒன்று 29.10.16 சனிக்கிழமை அன்று அல்மனார் அறிவியற்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

'பெண் பிரதிநிதித்துவத்திற்காய் ஒன்றினைவோம்;' எனும் தலைப்பில் நடைபெற்ற இச்செயலமர்வில் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களுக்கான சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி ஹேமந்தி குணசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.அத்துடன் இந்நிகழ்வில் லண்டன் ஹரோ கவுன்சில் உறுப்பினர் திருமதி ஹைறுல் கரீமா மரிக்கார் அவர்கள் விஷேட விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.


உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் வகையில் பெண்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள், கட்டமைப்புகள், நிருவாக முறைமைகள், செயற்பாடுகள் குறித்த விளக்கங்களினை இலங்கை உள்ளுராட்சி மன்றங்களுக்கான சம்மேளனத்தின் ஆலோசகர் MIM. வலீத் அவர்கள் தெளிவு படுத்தினார் . அத்துடன் நிகழ்வின் விஷேட அதிதியாக கலந்து கொண்ட லண்டன் ஹரோ கவுன்சில் உறுப்பினர் ஹைறுல் கரீமா மரைக்கார் அவர்கள் தனது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் கலந்து கொண்ட சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

NFGG மகளிர் அணியின் உருவாக்கம், பெண்களின் அரசியல் பங்களிப்புகள்மகளிர் அணியின் கடந்த கால செயற்பாடுகள் குறித்த presentation ஒன்றும் மகளிர் அணி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டது.

NFGG மகளிர் அணியின் பிராந்திய ஆலோசனை சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட சுமார் 150ற்கும் மேற்பட்ட சகோதரிகள் இச்செயலமர்வில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். 'இலங்கை அரசியலில் பெண்கள்' என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்றும் செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து சகோதரிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.