அல் இக்பால் பாலர் பாடசாலையின் 2016 வருடாந்த விளையாட்டு விழா-படங்கள்.

Written By avathani Media Network on Monday, October 31, 2016

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் பாலர் பாடசாலையின் 2016 வருடாந்த விளையாட்டு விழா 28-10-2016 நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அல் இக்பால் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

அல் இக்பால் வித்தியாலயத்தின் அதிபர் வி.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கும் கௌரவ அதிதியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துல் றஹ்மானும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் வருடாந்த விளையாட்டு விழா பங்குபற்றிய சிறுவர்,சிறுமிகளுக்கு சான்றிதழும்,கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதோடு அவர்களை விளையாட்டு போட்டிக்கு தயார்படுத்திய ஆசிரியைகளும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு அல் இக்பால் பாலர் பாடசாலை பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த பாலர் விளையாட்டு விழாவில் மஸ்ஜிதுல் ஸலாஹ் தலைவர் ஐ.ஜனாப்தீன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் எம்.எம்.ஜனூப்,காத்தான்குடி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் சீ.எம்.சமீம், அல் இக்பால் பாலர் பாடசாலை அபிவிருத்திக்குழு,விளையாட்டுக்குழு உறுப்பினர் யூ.எல்.இன்ஜூதீன் உட்பட ஏனைய உறுப்பினர்கள்,ஊர் பிரமுகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.