சியாம்பலகஸ்கொட்டுவ அந்நூர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுவற்கான விண்ணப்பங்கள் கோரல்

Written By avathani Media Network on Wednesday, October 19, 2016

(இக்பால் அலி)

குருநாகல் மாவட்டத்தில் சியாம்பலகஸ்கொட்டுவ அந்நூர் அரபுக் கல்லூரிக்கு 2017 ஆம் ஆண்டுக்கான் புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுவற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 

கல்வியைத் தொடர்வதற்கான அனுமதி நுழைவுத் தகைமைகள் உடல் ஆரோக்கியம் உடையவராகவும் நற்குணமுடையவராகவும் இருத்தல் வேண்டும். அல்குர்ஆனை சரளமாக ஓதுதல் வேண்டும் . மனனப் பிரிவில் 2017 ஜனவரி 31 ஆம் திகதியில் 11வயதையுடையவராக இருத்தல வேண்டும்;, அல்குர்ஆனை சரளமாக ஓதுதல், 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஷரிஆப் பிரிவில் 2017 ஜனவரி 31 ம் திகதியில் 16 வயதுக்கு மேற்படாது இருத்தல், அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு – மீட்டல் (தௌரா) முடித்திருத்தல் 8 ஆம் ஆண்டு பாடவிதானத்தை தொடர்வதற்கான தகுதியுடையோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

இப்பாட நெறிகள் 2017 ஜனவரியில் தொடங்க இருப்பதால் கல்வி பயில விரும்புவோர் றறற.யnழௌச.டம என்ற இணைய முகவரியில் இருந்து விண்ணப்பப்படிவத்தைப் பெற்று 2016-10-23 ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கின்றனர்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.