வெகு காலமாக இந்நாட்டில் கலைஞர்களை பாதித்து வரும் புலமைச் சொத்து உரித்துரிமை நிச்சயம் பற்றிய தடைகளுக்கு அரச மட்டத்தில் மற்றும் கலைஞர்களின் ஒருங்கிணைப்புடன் புதிய பிரவேசத்தை தயாரிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடல் பலவற்றில் மற்றும் வேலைத்திட்டங்களில் பின்பு கலைஞர்கள் பங்குபற்றும் சங்கங்களின் பலவற்றின் சம்மதத்துடன் பொது ஒன்றிய சங்கம் ஒன்றினை நிறுவுதல் சம்பந்தமாக நடைபெறும் விசேட சம்மேளனம் இந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மு.ப. 9.00 மணிக்கு மேல் மாகாண நுண்கலை நிறுவகத்தில் நடைபெறும்.
உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சட்ட பிரிவுடன் தேசிய புலமைச் சொத்து அலுவலகம் ஒன்றிணைந்து நடைபெறும் இந்த சம்மேளனத்திற்கு இசைத்துறை சார்ந்த பெருமளவு கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புலமைச் சொத்து உரிமை சம்பந்தமாக கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுடன் நடைபெற்ற முதல் கட்ட கலந்துரையாடல்கள் வௌ;வேறு தடைகளுக்கு மத்தியில் முன்னோக்கி சென்றதுடன், இந்த சம்மேளனம் அதன் மிகவும் முன்னோக்கிய பயணமாக கருதத்தக்கது எனலாம். வௌ;வேறு சமூகத்தினர் ஒன்றிணையக்கூடிய பொது ஒன்றிய சங்கத்தில் இசை துறையில் கலைஞர்களின் வெற்றிகளை பெற்றுக்கொடுப்பதற்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய புலமைச் சொத்து அலுவலகம் எடுக்கும் இவ் முயற்சிகள் அனைத்திற்கும் கலைஞர்களின் சுய ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுக்குமாறு இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சட்ட பிரிவு
முகவரி: மேல்மாகாண நுண்கலை நிறுவகம், 275ஃ74 ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை, கொழும்பு-07
பங்குபற்றும் கலைஞர்கள் தயவுசெய்து அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஓ.பி. மல்காந்தி - சட்ட அதிகாரி:- 077-4315642

