வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

Written By avathani Media Network on Tuesday, October 18, 2016


வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் பொருட்டு வியட்நாமின் பூகோள ரீதியிலான வரைப்படங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர குறிப்பிட்டார்.

இதன்மூலம் இரத்தினக்கல் அகழ்வதற்கான இடங்களை அடையாளம் காண்பதற்கு வியட்நாம் இலங்கைக்கு வாய்ப்பளித்துள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு வியட்நாமுடன் இணைந்து தொழில் புரிவதற்கான சந்தரப்பம் கிட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.