மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Written By avathani Media Network on Sunday, October 23, 2016

மட்டக்களப்பு சத்துருகொண்டான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேற்றிரவு 9 முப்பது அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

ஏறாவூர் பகுதியை சேர்ந்த 17 வயதான வஜிதரன் ரதிகன் மற்றும் கந்தசாமி விதுஷன் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.