இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை மாநகர சபை ஊழியர்கள் ஆறு பேரின் பிள்ளைகள் சித்தியடைந்துள்ளனர். இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாநகர சபை மண்டபத்தில் ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது எல்.ஏ.பாத்திமா ஜிஸ்ரா (மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயம்), எம்.ஏ.அஹமட் அல்பர் (சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்), எம்.ஏ.எம்.சிம்லி அஸீஸ் (மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி), எம்.அப்ரத் லைஸ் (சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம்), ஏ.ஜே.அமா ஆயிஷா (மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயம்), எம்.ஐ.பாத்திமா இவா (மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயம்) ஆகியோர் பரிசுப் பொதிகள் வழங்கி, பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், பொறியியலாளர் ரி.சர்வானந்தன், உள்ளூராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜுன், நிதி உதவியாளர் யூ.எல்.எம்.ஜௌபர், சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.எல்.எம். இஸ்மாயில் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






