(ஜுனைட்.எம்.பஹ்த்)
புதிய காத்தான்குடி முகைதீன் மூத்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்/ மம/அன்வர் வித்தியாலயத்தில் தோற்றி 70-150 புள்ளிகளைப் பெற்ற 120 மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை இன்று மட்/ மம/அன்வர் வித்தியாலய மண்டபத்தில் முகைதீன் மூத்தோர் சங்க தலைவர் ஜனாப்.C.M.M.அப்துல் காதர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் Dr.N.ஆரிப்(Regional Epidemiologist,RDHS Office-Kalmunai)அவர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் முன்னாள் காத்தான்குடி நகர பிதா U.L.M.N.முபீன் BA அவர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள் , அரசாங்க அதிகாரிகள்,ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர்...
இந் நிகழ்வில் அதிதிகளினால் மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..








