நெய்னாகாடு பங்களா வீதி திறப்பு விழாவும், வீதிகளின் அருகே மரங்களை நாட்டி அழகுபடுத்தும் நிகழ்வுகளும்.

Written By avathani Media Network on Sunday, October 16, 2016











( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )


சம்மாந்துறை, நெய்னாகாடு பங்களா வீதி திறப்பு விழாவும், வீதியின் இரு மருங்குகளிலும் மரங்களை நாட்டி அழகு படுத்தும் நிகழ்வுகளும்,நேற்று பங்களாவடியில் இடம் பெற்றன.



கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபா 10 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பங்களா வீதி திறப்பு விழாசம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நேற்று இடம் பெற்றது.



இதில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, வீதியினைத் திறந்துவைத்தார்.



அதனைத் தொடர்ந்து பங்களா சதுக்கத்திலும், வீதிகளின் இரு மருங்குகளிலும் மரக்கன்றுகள் நட்டு, பாதுகாப்பு வேலிகள் அமைக்கும்நிகழ்வும் இடம்பெற்றது.



இவ்வாறு நடப்பட்ட மரங்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும், இது போன்று பிரதேசத்தின் எல்லா வீதிகளினையும் மரம் நாட்டிப் பாதுகாப்பதுதொடர்பாக ஆலோசிக்கும் கூட்டமொன்றும் இடம் பெற்றது.



இதில் பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் திருமதி.எம்.எஸ்.றிப்னாஸ், அம்பாரை மாவட்ட மேலதிக நீர்ப்பாசனப் பொறியியலாளர்எம்.எஸ்.எம்.நவாஸ், நீர்ப்பாசனத் திட்ட முகாமையாளர் ஏ.எம்.எம்.மாஹீர், பிரதேச செயலாளர்களான ஏ.மன்சூர், ஐ.எம்.ஹனீபா உள்ளிட்டஉயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'ஏனைய பிரதேசத்தவர்கள் ஆச்சரியப்படக் கூடிய விதத்தில்இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளேன். அதற்கு நீங்கள் எல்லோரும் என்னுடன் கைகோர்த்து நின்று உதவவேண்டும். தேசியரீதியிலான கொள்கையில் மாற்றம் வராதவரை யானைப் பிரச்சினையை ஒழிக்க முடியாது. நாங்கள் சொல்கின்ற யானை வேலி, யானைவெடி, காவல் என்பதெல்லாம் ஒரு தீர்வல்ல. அதற்கான தீர்வு என்பது தேசிய ரீதியிலான ஒரு கொள்கையாக வடிவமைக்கப்பட்டு,நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவற்றைப் பேசவேண்டிய இடங்களில் நாங்கள் பேசியிருக்கிறோம். வேண்டுமானால் மேலும்பேசவுமிருக்கிறோம். அது சரிவரும் வரை நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்படுவோம். வெற்றி நிச்சயம்' எனத் தெரிவித்தார்.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.