அனுராதபுர பிரதேசத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அனுராதபுரம் பொலிஸ் விசேட குற்றப் பிரவுக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் போலி நாணயத்தாள்களுடன் அனுராதபுர வர்த்தக நிலையமொன்றில் பொருட்கள் கொள்வனவு செய்ய சென்றுள்ள நிலையில் குறித்த நபர் பற்றி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மற்றைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்,இதன்போது அவர்களிடம் இருந்து போலி நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

