அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அகமது லெவ்வை அவர்களின் 28வது வருட ஞாபகார்த்த நிகழ்வு

Written By avathani Media Network on Saturday, October 22, 2016

(எம். எச். எம். அன்வர்)

அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அகமது லெவ்வை அவர்களின் 28வது வருட ஞாபகார்த்த நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் அதன் தலைவர் பொறியியலாலளர் ஏ எம் எம் தௌபீக் தலைமையில் இடம்பெற்றது

மேற்படி நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம் எம் அப்துல் ரஹ்மான் சம்மேளனத்தின் பிரதித்தலைவரும் அகமட் லெவ்வை அவர்களின் சகோதரருமாகிய சட்டத்தரணி அப்துல் ஜவாத் முன்னாள் நகர முதல்வரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இணைப்புச் செயலாளர் யூ எல் எம் என் முபீன் முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அகமட் லெவ்வை மற்றும் சம்மேளன பிரதிநிதிகள் உலமாக்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கலைஞர்கள் கல்விமான்களும் கலந்துகொண்டனர் 

விஷேட சொற்பொழிவாளராக அஷ்ஷெய்ஹ் எம் பீ எம் பிர்தௌஸ் நளீமி அஷ்ஷஹீத் அகமட் லெவ்வையின் வரலாற்று நிகழ்வுகள் தொடர்பாக சொற்பொழிவாற்றியதுடன் அவர் தொடர்பான பாடல் மற்றும் பிரதேச மட்ட பாடசாலைக்கிடையிலேயான அறிவுக்களஞ்சியம் என்பனவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது 







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.