ஆட்சியை கவிழ்ப்பது உறுதி – மஹிந்த அணி கடும் சீற்றம்

Written By avathani Media Network on Saturday, October 1, 2016


நல்லாட்சி அரசாங்கம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாலூட்டுகின்றது. பிரிவினைவாதிகளுக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் அரசாங்கம், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் செயற்பாட்டாளர் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவத்தார்.

மாற்றத்ததை ஏற்படுத்துவதற்கான மக்கள் அலை நாட்டில் மேலெழுந்துள்ளது. மஹிந்த ராஜபக்~ தலைமையில் மக்கள் சக்தி விரைவில் உருவெடுக்கும். இரத்தினப்புரியில் 8 ஆம் திகதி நடைப்பெறவுள்ள மக்கள் பேரணி ஆட்சி கவிழ்ப்பின் முதற்படி எனவும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.