இராகலை தயானியின் 'அக்கினியாய் வெளியே வா' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா (23.10.2016)

Written By avathani Media Network on Monday, October 17, 2016

புரவலர் புத்தகப் பூங்காவின் 37 வது வெளியீடான இராகலை தயானியின் 'அக்கினியாய் வெளியே வா' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர் வரும் 23.10.2016 ஞாயிறு அன்று காலை பத்து மணிக்கு இராகலை தமிழ் மகா வித்தியாலய பாரதி மண்டபத்தில் ஒய்வுநிலை உதவி கல்விப் பணிப்பாளர் திரு பீ.மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் இலக்கியப் புரவலர் ஹாஸிம்; ஓமர் முன்னிலையில் நடைபெறும் அவ்விழாவில், சிறப்புரைகளை மேமன்கவி மற்றும் தமிழ்நாடு வளரி கவிதை இதழ் ஆசிரியர் திரு அருணாசுந்தரராசன் அவர்களும் நிகழ்த்துவார்கள். வாhழ்த்துரைகளை ஆசிரியரும் கவிஞருமான இராகலை பன்னீர் அவர்களும் , ஆசிரியரான ஐ. இந்துராணி ஆகியோர் மேற்கொள்வார்கள்.

ஏற்புரையை நூலாசிரியர் இராகலை தயானி நிகழ்த்த, வரவேற்புரையையும் நிகழ்ச்சித் தொகுப்பினையும் கவிஞர் எம்.ஐ.எம்.நாளீர் நிகழ்த்துவார்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.