காத்தான்குடி இல் நடைபெற்ற உலக சிறுவர் தினம் - 2016 மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா..

Written By avathani Media Network on Monday, October 3, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி FM MEDIA UNIT இனால் 01.10.2016 சனிக்கிழமை உலக சிறுவர் தினமும் சான்றிதழ் வழங்கும் விழாவும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் 
சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் A அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதியாக A.C.அஹமட் அப்கர் (SLAS) உதவிப் பிரதேச 
செயலாளர் காத்தான்குடி அவர்களும் விஷேட அதிதியாக S.M.M.ஸாபி (B.com). செயலாளர் 
நகர சபை காத்தான்குடி அவர்களும் கெளரவ அதிதிகளாக M.A.C.M.பதுர்தீன் (Jp) 
பிரதேச கல்விப்பணிப்பாளர்-காத்தான்குடி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் 2016 ம் ஆண்டில் தரம் 05 மாணவர்களுக்காக FM MEDIA UNIT நடாத்திய புலமைப்பரிசில் கருத்தரங்கிலும், பரீட்சையிலும் பங்குபற்றிய 
மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டதுடன். 
சிறுவர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

FM MEDIA UNIT இனது அங்கத்தவர்களின் பணியை கெளரவித்து சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது..

இந் நிகழ்வில் அதிகமான பாடசாலை மாணவர்களும்,பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர்.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.