NFGG மற்றும் சிப்லி பாறூக் இடையிலான குற்றச்சாட்டை நிரூபிபக்கும் அமர்வின் முடிவை அறிவிக்க தாமதமேன் NTJ விளக்கம்

Written By avathani Media Network on Thursday, September 8, 2016

NFGG மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற "குற்றச்சாட்டுக்களை நிறூபிக்கும்" அமர்வை NTJ ஏன் இணையத்தில் இதுவரை பதிவேற்றவில்லை? (தன்னிலை விளக்கம்)

கடந்த 02.09.2016 அன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆகியோருக்கிடையில் "குற்றச்சாட்டுக்களை நிறூபிக்கும் அமர்வு" தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் இடம் பெற்றது. சுமார் நான்குமணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வு இதுவரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. காரணம் அமர்வின் இடைநடுவில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் மீது குற்றம் சுமத்திய விடயத்தில் இரண்டு சாட்சிகளை கொண்டு வந்து நிறூபிக்கும் கட்டாயத்திற்கு ஆளானார். ஆனால் குறித்த சபையில் அந்த சாட்சிகளை கொண்டு வரும் சூழ்நிலை அவருக்கு இருக்கவில்லை.

"மீண்டும் தனியானதோர் அமர்வு ஏற்படுத்தப்பட்டால் எனது சாட்சிகளை கண்டிப்பாக நான் கொண்டு வருவேன்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தவிசாளர் கூறிய போது "சாட்சிகளை கொண்டு வரும் விடயத்தில்" மறு அமர்வொன்றை நடாத்துவது என தேசிய தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்தது. இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 15.09.2016 வியாழக்கிழமை அன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து "சாட்சிகளை கொண்டு வந்து நிறூபிக்கும் அமர்வு" எமது ஜமாஅத் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. சாட்சிகள் தொடர்பான‌ இரண்டாம் அமர்வு நடந்தேறிய பின் நிகழ்வுகளின் காணொளி முழுமையாக வெளியிடப்படும் இன்ஷாஅல்லாஹ்.
-ஊடகப் பிரிவு

தேசிய தவ்ஹீத் ஜமாஅத், இலங்கை
08.09.2016
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.