கவிதை வாசிப்பும்; கவிதைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும்

Written By avathani Media Network on Thursday, September 8, 2016

2016 செப்டம்பர்- 15-25 வரை பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் சர்வதேசப் புத்தக கண்காட்சியின் பொழுது இலங்கை எழுத்தாளர் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தின் அனுசரணையுடன் கண்காட்சி மண்டபத்தில் அமைக்கப் பெற்ற இலக்கிய மேடையில் செப்-18ந்திகதி- மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும் சிங்கள -தமிழ்க் கவிஞர்கள் கலந்துக் கொள்ளும் கவிதை வாசிப்பு நிகழ்வும் கவிதைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த நிகழ்வில் தமிழ்க் கவிஞர்களான மேமன்கவி எம்.ஏ.எம் ஆறுமுகம் ஆகியோரின் கவிதை வாசிப்பும்,பசறையூர் க.வேலாயுதம் குழுவினரின் நாட்டார் கவிதைகள் நிகழ்வும் இடம் பெறும்.

அத்தோடு கொழுமபு-15 முகத்துவாரம் இந்து கல்லூரி மாண-மாணவிகள் கவிதைப் பாடலும் நடனமும் இடம் பெறும். ஆசிரியைகளான திருமதி நிமல்டா சோமநாதன், திருமதி ஜெயலஷ்மி ஜெகதீசன், செல்வி நிஜா கனகசிங்;கம் ஆகியோர் நெறிப்படுத்தியிருக்கும் இந்த நிகழ்வில் கலைஷன் ஸ்ரீதரன், மதுரன் புனேசன், நிலூஷா சுப்பிரமணியம், கிருஷ்சாந்தினி சங்;கர், ஷர்மிளா உதயகுமார், பிரதீஷா ஜெயராசன்,சிந்துஜா சந்திரகுமார், தனுஷா செல்வம் ஆகியோர் பங்காற்றுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்குப் பெறும் கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் மாண-மாணவிகளுக்கும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் சான்றிதழ்கள் வழங்கி வைப்பார்.

-மேமன்கவி
உப செயலாளர்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.