ஓட்டமாவடியில் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம்

Written By avathani Media Network on Friday, September 9, 2016

(எம்.எஸ்.எம். சாஹிர்)

“ YOUTH GOT TALAENT” சிரம சக்தி சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளுக்கான பாதுகாப்பு கொட்டி அமைப்பதற்கான ஆரம்ப வேலைத்திட்டம் அஸ் பாகுல் கவி இளைஞர் கழகத்தினால் ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார விவகார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். 

கௌரவ அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.எம்.றூவைத், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.என்.எம்.நைறூஸ், பாடசாலை அதிபர் ஜுனைட், பிரதி அதிபர் ஹலீம் இஷ்ஹாக், கபீர், பழைய மாணவர் சங்க செயலாளர் சுபைர், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர் கழக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.



   
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.