நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சில பௌத்த பிக்குகள் தாக்கல் செய்த மனுவொன்று தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 12ம் திகதி குறித்த நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மதுபான இறக்குமதி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகை தொடர்பிலேயே இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

