(இக்பால் அலி)
ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. மகத்துவம் மிக்கதும் கூட. இப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து வாழ் முஸ்லிம் மக்களுக்கும் மனப்பூர்வமான பெருநாள் வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எம். ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் ஹஜ்பெருநாள் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
நமது செயற்பாடுகளை அனைத்தையும் ஒற்றுமையோடும் உளத்தூய்மையோடும் அல்லாஹ்வின் அருளுக்குரியதாக மேற்கொள்ளும் போதுதான் நல்லெண்ணத்தின் பேரிலான வெற்றியோ ஈடேற்றமோ எய்த முடியும்.
எனவே இந்த நல்ல நாளில் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாயகத்தை நெஞ்சில் நிறுத்தி நமது வாழ்க்கையினை உயிரோட்டமுடையதாகவும் சக்தியுடையதாகவும் ஈடேற்றமுடையதாகவும் நோக்கி ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டும். எம்மிடையே காணப்படும் வேற்றுமைகளைக் களைந்து பயன் தரும் வாழ்வில் நம்மை இணைத்துக் கொண்டு நற்பேற்றினை அடைவோம். இதற்காக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் எம்மை பொருந்திக் கொள்ள வேண்டும் என தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
