(ஏ.எம்.ஏ.பரீத்)
தோப்பூரை அண்டிய பிரதேசங்களான. அல்லை நகர், தோப்பூர், இக்பால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கறி முருங்கைகள் என்று மில்லாதவாறு அளவு அதிகமாக பூத்துக் காய்த்து ள்ளன
ஒரு கிலோ முருங்கைக் காய் 100 ரூபா முதல் 110 ரூபா வரை விலைப்போகின்றது. இங்கிருந்து சில வியாபாரிகள் முருங்கைக் காய்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு தம்புள்ள மற்றும் ஏனைய இடங்களுக்கு கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்கின்றார்கள்.
அனேகமாக ஒவ்வொரு வீடுகளிலும் முருங்கை மரங்கள் காய்த்துக்குலுங்குவதனைகாணக்கூடியதாகவுள்ளது.
இதற்கான காரணம் அரசாங்கத்தினால் காய்க்க கூடிய நல்லின மரக்கன்றுகள் வழங்கப்பட்டமையும் ஒரு காரணமாக கொள்ளலாம். முருங்கை அதிக போசனைச் சத்து நிறைந்த ஒரு மரக்கறியாகும். இதனை மக்கள் அதிகம், விரும்பி உண்பர்.

