காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் புதிய தொழில்நுட்ப ஆய்வு கூடத் திறப்பு விழா.

Written By avathani Media Network on Wednesday, August 3, 2016


(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் புதிதாய் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத் திறப்பு விழாஇன்று பெற்றது.

கல்லூரி அதிபர் ரி.வித்தியாராஜன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர்எஸ்.தண்டாயுதபாணி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடிஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களானஎம்.இராஜஸ்வரன், ரி.கலையரசன், கல்லூரி அபிவிருத்திச் சபைச் செயலாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமானவீ.ரி.சகாதேவராஜா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் பரதன் கந்தசாமி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் போல்உள்ளிட்ட கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டிஆட்சியில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டால் அதற்காக நாங்கள் போராடத் தயாராக உள்ளோம்.எந்தத் தீர்வாக இருந்தாலும் அதில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதில் நாம்ஆர்வமாகவும், அக்கரையாகவும் இருக்கின்றோம். அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை வெறுத்து, அவர்களைப்புறக்கணித்து செயற்படுகின்ற எந்த அரசியல் வாதியாக இருந்தாலும், அரசியல் கட்சித் தலைமையாக இருந்தாலும்அவர்களை நாங்கள் எதிர்ப்போம். எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கின்றோம். தென் கிழக்கு அலகாகமாற்றப்படுவதை எமது சமூகங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதற்கு எதிர்த்துக் குரல்கொடுக்காதவர்கள் இம்மாவட்டத்தின் எதிரியாகத்தான் கருதப்படுவார்கள்' எனத் தெரிவித்தார்.

மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'கிழக்கு மாகாணம் ஏனையமாகாணங்களை விட சிறப்பானதொரு மாகாணமாகும். சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய மக்கள் பரந்து, செறிந்துவாழ்கின்ற மாகாணமாகும். இங்கு எல்லா இனமக்களையும் திருப்திப் படுத்தக் கூடிய வகையில் எனது சேவைகளைமுன்னேடுத்து வருகிறேன்' எனத் தெரிவித்தார்.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.