தலைக்கவசம் பாவிப்பது எங்களுக்கல்ல உங்களின் பாதுகாப்புக்காகவே போக்குவரத்துபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார

Written By avathani Media Network on Saturday, August 6, 2016


(எம். எச். எம. அன்வர்)

காத்தான்குடி பிரதேசத்தில் குற்றச்செயல்களை குறைக்கவும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காட்டி பொலிசாரின் உதவியுடன் அக்குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும் சிவில் குழுக்கழுடன் கலந்துரையாடலும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி 165 ஏ பிரிவில் சிவில் பாதுகாப்பு குழுவின்தலைவர் எம் ஐ எம் ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்றது

மேற்படி நிகழ்வில் போக்குவரத்துபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார மேலும் கருத்து தெரிவிக்கையில் 

காத்தான்குடி பிரதேசத்திலேயே அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்றன தலைக்கவசம் பாவிப்பது எங்களுக்கல்ல உங்களின் பாதுகாப்புக்காகவே அணியச் சொல்கின்றோம் பெற்றோர்கள் இவ்விடயத்தில் கவனயீனமாகவும் அசமந்த பொக்கிலும் காணப்படுகின்றனர் சிறிய பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்ட கற்றுக்கொடுக்கின்றனர் இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்போது இந்த ஒரு தடைவ மாத்திரம் தயவு செய்து விட்டு விடுங்கள் எனக்கெஞ்சுகின்றனர் இது ஒரு பிழையான நடைமுறையாகும் 

அத்துடன் காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள யூ வடிவ சுற்று வட்டங்களை நீக்கினால் விபத்துக்களை பெரும்பாலும் தடுக்க முடியும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளேன் யாருக்காகவும் யாருடைய தனிப்பட்ட தேவைக்காகவும் இதனை விட்டுக்கொடுக்க முடியாது எனத்தெரிவித்தார்

மேற்படி நிகழ்வுக்கு பிரிவ கிராம சேவை உத்தியோகத்தர் எச் எம் அஸ்ஹர் பொலிஸ் நிருவாக உத்தியோகத்தர் ஹக்கீம் சிவில் பாதுகாப்பு பொறுப்பு உத்தியோகத்தர் முஜாஹித் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான அடையாள அட்டைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன 







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.