மட்டக்களப்பு சிறைச்சாலையில் வருடாந்த இரத்ததான நிகழ்வு-படங்கள்.

Written By avathani Media Network on Saturday, August 6, 2016


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில் வருடா வருடம் மிகச் சிறப்பாக இடம்பெற்றுவரும் இரத்ததான நிகழ்வு 06-08-2016 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான காரியாலத்தில் இடம்பெற்றது.

'தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம்' இரத்த தானம் செய்து மக்கள் உயிர் காப்போம் எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான நிகழ்வுக்கு மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யூ.எச்.அக்பர் தலைமை தாங்கினார்.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் யஸிந்து பெர்னாண்டோவினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள்,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் ஆகியோர் தங்களது இரத்தத்தை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் யஸிந்து பெர்னாண்டோ தெரிவித்தார்.

வருடா வருடம் இடம்பெற்றுவரும் குறித்த இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் என்.பிரபாகரன், மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச் சங்கத் தலைவர் என்.பி.ரஞ்சன் உட்பட அதன் பிரதிநிதிகள்,மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கிப் பிரவினர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.