இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபங்களில் கடமைகளில் ஈடுபட்டிருந்த, கண்காணிப்பாளர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணி புரிய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் கடமைகளில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்கள் நால்வரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை உயர்தரப் பரீட்சைகள் குறித்து 50 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, அவற்றில் பாரிய குற்றச்சாட்டுக்களாக நான்கு பதிவாகியுள்ளதாக, டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனையவை சிறு சிறு சம்பவங்கள் என்பதோடு அவை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

