சாய்ந்தமருதைச்சேர்ந்த சிரேஷ்டஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான ஹாதிபுல் ஹுதா எம்.எம்.எம். நூறுல்ஹக் எழுதிய “முஸ்லிம் அரசியலின் இயலாமை” நூலின் இரண்டாம் பதிப்பு வெளீயீட்டு விழா எதிர்வரும் 07.08.2016பிற்பகல் 04 மணிக்கு கொழும்பு தெமட்டகொட அகில இலங்கை வை.எம்.எ.எ மண்டபத்தில் முஸ்லிம் மீடியா போரத்தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ்.என்.எம் அமீன் தலைமையில் நடைபெறும்.
பிரதம அதிதியாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீனும் கௌரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலியும் விசேட அதிதிகளாக அரச வர்த்தக கூட்டுத்தாபனதலைவர் கலாநிதி எ.எம்.ஜெமீல் முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான பிரபா கனேஷன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
மற்றும் அதிதிகளாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கூட்டமைப்பு தலைவர் கலாநிதி என். குமார குருபரன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தவிசாளர் பொறியாளர் அப்துல் ரஹ்மான், உலமாக் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
நூலின் முதற்பிரதியை இலக்கிய புரவலர் ஹாஸிம் உமர் பெறும் அதேவேளை தொடக்க உரையை கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீனும் கவி வாழ்த்தினை கவிஞர் இப்னு அஸுமத்தும், நூல் திறனாய்வை ஓய்வு நிலை உதவிக் கல்விபணிப்பாளர் கலாபூசணம் எ.பீர் முஹம்மதும் நிகழ்த்துவர்.
