ஜம்மிய்யதுல் உலா சபையின் புதிய நிருவாக சபைக்கு பழையவர்களே மீண்டும் தெரிவு

Written By avathani Media Network on Wednesday, July 27, 2016


(இக்பால் அலி)

ஜம்மிய்யதுல் உலா சபையின் வருடாந்த மாநாட்டில் புதிய பொது நிர்வாகக் குழு தெரிவில் மீண்டும் அதே நிர்வாக குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு குருநாகல் நகர் சிட்டி ஜம்மிய்யதுல் உலமா சபை மட்டுமல்ல நாட்டு அனைத்து முஸ்லிம் மக்களும் பேருவகை கொண்டுள்ளதாக குருநாகல் நகர் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவரும் குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் சமூக சேவைப் பிரிவு பொறுப்பாளரும் மஹரம கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நிர்வாக சபை பணிப்பாளருமான அஷ்ஷெ;ய்க் ஜே. எம்.. இம்ரான் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் புதிய பொது நிர்வாகக் குழுத் தெரிவு கண்டி லைன் பள்ளிவாசலில் 24-0-2016 நடைபெற்றது. இந்த புதிய நிர்வாகக் குழு தொடர்பாக குருநாகல் நகர் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவரும் குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் சமூக சேவைப் பிரிவு பொறுப்பாளருமான கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நிர்வாக சபை பணிப்பாளருமான அஷ்ஷெ;ய்க் ஜே. எம்.. இம்ரான் இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

சன் மார்க்கத்துறையிலும் மற்றும் பொது விடயங்களிலும் அனுபவம் நிறைந்த நிர்வாகக் குழுவினர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை என்பது எமது எதிர் காலப் பணிகளுக்கு மேலும் வலுசேர்க்கக் கூடியதாக அமைந்துள்ளன. அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி , அஷ்ஷெய்க் அகார் முஹமட், அஷ்ஷெய்க் முபாரக் மதனி மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்களுடைய வழிகாட்டலுடன் கடந்த காலத்தில் சமகாலப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து நிதானத்துடன் இயங்கிய செயற்பாடுகள் சகல இன மக்கள் மத்தியிலும் செல்வாக்கு மிக்க ஒன்றாக இடம்பிடித்துள்ளது

முஸ்லிம்களுக்கு வரும் அனைத்து சவால்களையும் பொறுப்புணர்வுடன் ஏற்று எல்லா வகையிலான தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து செயற்பட்டவர்கள் மீண்டும் உலமாக்களினால் உள்ளீர்க்கப்பட்டு நியாயமான முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பது உண்மையிலே வரவேற்கப்பட வேண்டிய அம்சமாகும்.

முஸ்லிம்களுடைய மார்க்க விடயங்களுக்கும் முஸ்லிம் மக்களுடைய நியாயபூர்மவான அபிசாஷைகைளுக்கும் பணியாற்றும் ஜம்மிய்யதுல் உலமா தம் இலட்சியப் பயணதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். புதிய பொது நிர்வாகக் குழு குறித்து சகல மட்டத்தினராலும் பாரட்டப்படுவதை அறியும் போது பெரும் திருப்திகரமாக இருக்கின்றது. எதிர்காலத்தில் பள்ளிகளில் கடமையாற்றும் உலமாக்கள் மற்றும் முஅத்தீன்மார்கள் நலன் கருதி முஸ்லிம் சமயம் கலாசாரத் திணைக்களத்துடன் இணைந்து கருமமாற்ற வேண்டிய தேவைப்பாடு அதிகம் இருக்கிறது. 

எனவே இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப பள்ளிவாசல்களில் கடமையாற்றும் உலமாக்கள் முஅத்தீன்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யக் கூடிய விதத்தில் இந்த புதிய நிர்வாக குழு செயற்பட வேண்டும் எனவும் அதேவேளை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பணி நீடித்து நிலைக்க வேண்டும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.