அக்டோபர் 10 உலக உள நல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகளை நடார்த்தவுள்ளது. மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் திருமதி.தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் நடாத்தப்படும் இப்போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூபா 10,000.00, 5,000.00, 3,000.00 பணப்பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படும்.
'மனநலம் சிறக்க இனநலம் சிறக்கும்' எனும் தலைப்பில் ஐம்பது வரிகளுக்கு மேற்படாமல் கவிதையும் (மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதை)
'மனநலப் பாதிப்பு சமூக வடு அல்ல' எனும் தலைப்பில் ஆயிரம் சொற்களுக்கு மேற்படாமல் கட்டுரையும் கட்டாயம் கணனியில் அச்சிடப்பட்டு (Type செய்து) அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
வயது வித்தியாசமின்றி ஆர்வமுள்ள அனைவரும் பங்குபற்றக்கூடிய இப்போட்டியில் ஒருவர் இரு போட்டிகளிலும் பங்குபற்ற முடியும். ஒரு போட்டியில் பங்குபற்றுபவர் பதிவுக்கட்டனமாக ரூபா 200.00 வும் இரு போட்டிகளிலும் பங்குபற்றுபவர் பதிவுக்கட்டனமாக ரூபா 350.00 வும் நிறுவன பெயரின் கணக்கிலக்கத்திற்கு (113200120020662 மக்கள் வங்கி மட்டக்களப்பு நகர் கிளைக்கு) செலுத்தி பற்றுச்சீட்டினை ஆக்கங்களுடன் இணைத்து பதிவுத்தபாலில் செப்டெம்பர் 15ம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர் சர்வதேச உளவியல்கார் கற்கைகள் நிலையம் இல : 25ஃ3, 4ம் குறுக்கு கல்லடி வேலூர் மட்டக்களப்பு என்ற முகவரிக்கு அனுப்பப்டுதல் வேண்டும்.
மேலுதிக விபரங்களுக்கு 0776984338, 0754362897 ஆகிய கைத்தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


