பலத்த காற்று வீசும் சாத்தியமுள்ளதால் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

Written By avathani Media Network on Sunday, June 5, 2016


நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் அடிக்கடி பலத்த காற்று வீசும் சாத்தியமுள்ளதால் கடலுக்கு செல்வோர் மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளம் முதல் மன்னார் ஊடாக திருகோணமலை வரை மற்றும் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரித்து செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் எனவும் அதனால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.