முஸ்லிம் மாதர் சங்கத்தினால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!

Written By avathani Media Network on Wednesday, June 29, 2016


(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்குஉலர் உணவு பொதிகள் வழங்கும் வைபவம் கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள வைஎம்எம்ஏ இயக்க தலைமையக கேட்போர் கூடத்தில் தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.

மேல் மாகாண சபை உறுப்பினரும் அக்ரம் பவுண்டேஷன் தலைவருமான மொஹமட் அக்ரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.. இந்த நிகழ்வில் ஜப்பார் மௌலவி துஆ பிரார்த்தனை நடத்தியதுடன் இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் சேவைகளையும் பாராட்டினார். இளம் மாதர் முஸ்லிம் சங்க போசகரான ஹாஜியானி ஹாலிதா சஹாப்தீன் தாய்மார்களுக்கு ஒரு தொகை சாரிகளை அன்பளிப்பாக வழங்கினார். அத்தோடு வலது குறைந்த மூவருக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன. 

வைஎம்எம்ஏ இயக்க முன்னாள் தலைவரான காலித் பாரூக் மற்றும் ஏஷியன் பெப்ரிக் நிறுவன பணிப்பாளர் திருமதி ஜாபீர்இ இளம் மாதர் முஸ்லிம் சங்க போசகரான ஹாஜியானி ஹாலிதா சஹாப்தீன் இசங்க செயலாளரான தேசமான்ய மர்ளியா சித்தீக் இபொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹா உட்பட சங்க உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர். சுமார் 300 குடும்பங்களுக்கு இந்த நிகழ்வின் போது உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினர்களினால் பத்ரு மௌலூதும் ஓதப்பட்டது.

தகவல்:- நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 

(வைடப்ளியூஎம்ஏ ஊடக இணைப்பாளர்)







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.