சீனிக்கான வரியை அதிகரிக்க யோசனை

Written By avathani Media Network on Sunday, June 26, 2016


சீனி உற்பத்தி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரி வீதத்தை அதிகரிக்க அமைச்சரவை யோசனை முன்வைத்துள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

தொற்றா நோய்கள் மக்களுக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சீனிக்கான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என தான் முன்னதாக தெரிவித்திருந்த போதும், அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

எனினும், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து போன்ற நாடுகளில் சீனிக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, மென்பாணங்களில் சீனியின் அளவைக் குறிக்கும் வர்ண குறியீடுகளை அறிமுகப்படுத்தும் சட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.