கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதம நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள தேவாலயம் ஒன்றினுள், பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யபட்டனர்.
இதன் பிரகாரம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டார்.

