(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்)
புனித ரமழான் மாதத்தில் நோன்புப் பிடிக்க வசதியற்ற வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வைபவம் இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்றது.
லைலா உம்மா தீன் பவுண்டேஷன் அனுசரணையில் கொழும்பு தெமட்டகொட வீதியிலுள்ள சங்கப் பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு சங்கத் தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமை வகித்தார்.
லைலா உம்மா தீன் பவுண்டேஷனைச் சேர்ந்த கலாநிதி அனீஸ்தீனின் சார்பில் ஜனாப் நிஸ்தார் அனீஸ், வை.எம்.எம்.ஏ. யின் முன்னாள் தலைவர் காலித் பாரூக், இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் பொதுச் செயலாளரான தேசமான்ய மர்ளியா சித்தீக் உட்பட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையானோருக்கு இந் நிகழ்வின் போது பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் - வை.டப்ளியு.எம்.ஏ. ஊடக இணைப்பாளர்)





