( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியின் மாணவத் தலைவர்கள் தினவிழா இன்று கல்லூரி விழா மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.எம்.ஜாபீர் தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.எம்.றபீக், சமாதானக் கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.றசீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு,சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கு பிரதம அதிதி பைசால் காசிமினால் சின்னஞ் சூட்டப்பட்டதோடு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதே வேளை கணிஷ்;ட மாணவத் தலைவர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் உணர்ந்து, எதிர் காலத்தில் செயற்படுவோம் எனத் தெரிவித்து, சத்தியப்பிரமாணஞ் செய்யும் நிகழ்வும் அதிதிகள் முன்னிலையில் இடம் பெற்றது.
இறுதியாக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர் இணைந்து பிரதியமைச்சர் பைசால் காசீமுக்கு பொன்னாடை போற்றி மகிழ்ந்தனர்.
இங்கு பிரதியமைச்சர் பைசால் காசீம் கருத்துத் தெரிவிக்கையில்:-'மாணவத் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் எப்போதும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். உங்கள் சேவைக் காலத்தில் அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் பாடசாலையில் அவர்கள் எல்லோரும் சமமாக மதிக்கப்பட வேண்டம். அப்படி நடந்து கொண்டால்தான் உங்களால் சிறந்த மாணவத் தலைவனாக செயற்பட முடியும்' எனத் தெரிவித்தார்.
