அஹதிய்யா ஆசிரியர்களுக்கு 15வது பயிற்சி செயலமர்வு

Written By avathani Media Network on Tuesday, June 14, 2016








மத்திய மாகாண முதலமைச்சரும் முஸ்லிம் கலாசார, கல்வி விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சருமான சரத் ஏக்கநாயக்கவின் ஆலோசனையின் கீழ் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் மத்திய மாகாண அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி செயயலமர்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறும்.


இதில் கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 300 அஹதிய்யா ஆசிரியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. 

பங்குபற்றும் ஆசிரியர்களுக்கு உணவு காகிதாதிகள் வழங்கப்படுவதுடன் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சரின் முஸ்லிம் கலாசார விவகார இணைப்பதிகாரி ரஷீத். எம். றியாழ் தெரிவித்தார். 



இந்த செயலமர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய அஹதிய்யா பாடசாலைகள் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள rasheedmriyal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனோ 0777 798898 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளமுடியும்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.