வௌிநாட்டில் முன்னெடுக்கப்படும் இலங்கையர்களின் இரகசிய வங்கி கணக்குகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய வருமான வரி திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கைகயை முன்னெடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கையூடாக சந்தேநபர்கள் அடையாளங் காணப்பட்டு அவர்கள் மீதான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதனூடாக அரசாங்கத்தின் பூசப்படும் சேற்றை அகற்றுவதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளில் இரகசிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் வங்கி கணக்குகளிலுள்ள இலங்கையர்களின் பணத்தை மீண்டும் நாட்டிற்கு பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
உலக நாடுகள் தங்களுடைய வளங்களை பாதுகாத்துக் கொள்ளும் இந்த தருணத்தில் இலங்கை போன்ற வறிய நாடுகளிலுள்ள சிலர் இவ்வாறான குற்றச் செயல்களை புரிவதனூடாக இங்குள்ள வளம், குறைவடைவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலை மாறும் சந்தர்ப்பத’தில் மேலைத்தேசத்திடம் கடன் பெறுவது இல்லாது செய்யப்படும் என நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பனாமா அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்களிடம் விடயங்களை கேட்டறிவதற்கு நடவடிக்ைக எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

