பசில் ராஜபக்ஸ பிணையில் விடுவிப்பு

Written By avathani Media Network on Thursday, May 12, 2016


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் வீதம் மூன்று சரீரப் பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு வாக்கு மூலம் வழங்குவதற்குச் சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

மாத்தறை பகுதியில் காணி தொடர்பான பிரச்சினை ஒன்றை அடிப்படையாக வைத்து நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.