(S.சஜீத்)
காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் NTJயின் ஏற்பாட்டில் 06.05.2016 வெள்ளிக்கிழை நேற்யை தினம் மாபெரும் சீதன ஒழிப்பு மாநாடு நிகழ்வொன்று இடம்பெற்றன.
இம் மாநாட்டின் போது "இஸ்லாம் கூறும் திருமண ஒழுங்குகள்" எனும் தலைப்பில் மௌலவி M.Y.M தௌபீக் (பலாஹி) அவர்களாலும்,"வழக்கொழிந்து வரும் இஸ்லாமிய சொத்துப் பங்கீடும் வளர்ந்து வரும் வரதட்சணைக் கொடூரமும்" எனும் தலைப்பினில் மௌலவி M.C.M. ஸஹ்ரான் (மஸ்ஊதீ) அவர்களாலும் மார்க்க சொற்போழிவு நிகழ்த்தப்பட்டன.
இதன்போது பின்வரும் அம்சங்கள் பற்றி ஆலிம்களால் உரையாடப்பட்டன அதாவது,
01. சீதனக் கொடுமையால் பெற்றோர்கள் பிச்சையெடுக்கும் அவலம்!
02. முதிர்க் கன்னிகளை விபச்சாரத்தில் தள்ளும் சீதனம்!
03. சீதனத்தால் கொல்லப்படும் பெண் சிசுக்கள்!
04. சீதனம் ஏற்படுத்திய பாரபட்சமான சொத்துப் பங்கீடும் பாகப் பிரிவினையில் அநீதமும்!
05. இஸ்லாம் கூறும் சொத்துப் பங்கீட்டின் சிறப்பம்சங்கள் என்ன?
06. மஹர் ஏன் கொடுக்க வேண்டும்?
07. சீதனத்தால் பெண்ணுரிமை எப்படி பறிக்கப்படுகிறது?
08. சீதனம் பெரும்பாவத்தை விடக் கொடியதா?
09. சீதனம் வாங்கினால் வாழ்வில் பரகத் பறிக்கப்படுமா?
10. பெண் தரப்பு அன்பளிப்பாகக் கொடுப்பது சீதனமாகுமா?
11. பெண் தரப்பாரிடம் பெறப்படும் வீடு, சீதனம் என்பதற்கான சான்றுகள் என்ன?
12. 'வீடு மணப் பெண்ணின் உரிமை' என்று னுச.அஹ்மத் அஷ்ரப் கூறுவது உண்மையா?
13. சீதனத்தை நியாயப்படுத்தி சிவப்புத் தொப்பி முபாரக் மௌலவி சொல்வது என்ன?
14. பெண் வீட்டார், பெண்ணுக்கு நகை போடலாமா?
15. கல்யாண சீர் வரிசையும் சீதனதமா?
16. பெண் வீட்டு விருந்தும் சீதனக் கொடுமையில் அடங்குமா?
17. மெத்தப் படித்த சில மேதாவிகள் நமது 'சீதன ஒழிப்பு மாநாட்டை' எதிர்ப்பதன் பிண்ணனியென்ன?
18. வரதட்சணை வன்கொடுமையை ஒழிக்க என்ன வழி?
போன்ற விடயங்களும் விரிவாக அலசப்பட்டன. அத்துடன் வரதட்சணைக் கொடுமையால் மத்திய கிழக்கு நாடுகளில் எமது இளைஞர்கள் படும் வேதனை நிறைந்த வாழ்க்கையும், அவர்களின் வாக்கு மூலங்களும் பேட்டிகளாக திரையில் காண்பிக்கப்பட்டன.
மேலும் இதன்போது பல இளைஞர்கள் அணி திரண்டு மேடையேறி சீதன பாவகாரியத்தில் இருந்து என்னை நான் பாதுகாப்பபேன் என்று உறுதிமொழியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.








