அக்கரைப்பற்றில்........... நாளை தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு

Written By avathani Media Network on Friday, May 6, 2016


(சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்)

இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில், தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு நாளை (07) காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அக்கரைப்பற்று பாலத்தடி மரச்சோலை என்னும் இடத்தில் இடம்பெறவுள்ளது.

‘சுவனம் நோக்கிய பயணம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டில், பிரபல உலமாக்களான அப்துல் ஹமீத் ஷரயி, முர்ஸித் அப்பாஸி, ஜாபிர் ஸரபி, நியாஸ் ஸிராஜி, அன்ஸார் தப்லீகி, அப்துல் கனி ஹாமி, சாபித் ஷரயி, அன்சார் மக்கி, ஹாதி அப்பாஸி, அர்ஹம் இஹ்சானி, ஆஸிக் ஸலபி போன்றோர் மார்க்க சொற்பொழிவாற்றவுள்ளனர். 

இதில் பெண்களுக்காகவும் விசேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொள்ள வருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

இம் மாநாட்டை இணையத்தளத்தினூடாகவும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதனை live@www.miansar.com என்ற முகவரியில் பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.