கண்டி காசல் யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஏழாவது வருட கிரிக்கெட் சுற்றுப் போட்டி

Written By avathani Media Network on Friday, May 6, 2016


கண்டி காசல் யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டு ஏழாவது வருடமாக நடத்தப்படும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி 8-05-2016 கண்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வை முன்னிட்டு விளையாட்டுக் கழகங்களுக்கு டிசேட் விநியோகிக்கின்ற விசேட வைபவம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் எம். ராசிக் தலைமையில் 05-05-2016 கண்டி காசல் லேனில் நடைபெற்றது.

சீ பீ எல் என அழைக்கப்படும் இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் எட்டுக் கழகங்கள் பங்கு பற்றவுள்ளன. 

இதில் ரூஸ்டர்ஸ், டீன் ஸ்பைடர், ரூமி சார்க்ஸ், சாந்தனி லயன்ஸ், எஸ். பீ.க்நொக்லிஸ், சென்றல் ஸ்டேஜ், பூமா ஜுவல், பெசன் யார்ட் ஆகிய விளையாட்டுக் கழகங்கள் போட்டியில் களமிறங்கவுள்ளனர்.

சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த விகெட் காப்பாளர், சிறந்த ஆட்டக் காரர். இறுதிப் போட்டியில் சிறந்த ஆட்ட நாயகன், சிறந்த வீரகள் எனத் தெரிவு செய்யப்படுவர்களுககு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அதேவேளை ஒரு ஓவருக்கு ஐந்து சிக்ஸ் அடிப்பவருக்கு பெறுமதி மிக்கப் பரிசாக வழங்கப்படவுள்ள மோட்டார் சைக்கிலும் இங்கு காட்சிப்படுத்தபட்டிருந்தன.

இந்நிகழ்வில் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்து முக்கிய பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்பால் அலி




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.