மொபைல்போனை விழுங்கிய கைதி

Written By avathani Media Network on Sunday, May 15, 2016


அமெரிக்காவின் டும்ளின் நகரில் செயற்பட்டு வரும் மனநல காப்பகத்தில் இருந்த 29 வயதான கைதி ஒருவர் சிறியரக மொபைல் போன் (கையடக்க தொலைபேசி) ஒன்றை விழுங்கியுள்ளார்.

விழுங்கி 6 மணிநேரம் கடந்த பின்னர், அந்நபர் அங்கிருந்த ஊழியர்களிடம் ”நான் மொபைல்போனை விழுங்கிவிட்டேன்” என கூறியுள்ளார்.

மொபைல்போனை விழுங்கிய காரணத்தால் அந்நபருக்கு விடாப்பிடியாக வாந்தி வந்துகொண்டே இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

எண்டோஸ்கோப் மூலம் ஒரு நீண்ட மெல்லிய நெகிழ்வான குழாயின் வழியாக ஒளி மற்றும் வீடியோ கமெராவினைப் பயன்படுத்தி பார்த்தபோது உணவுக்குழாயின் வழியாக மொபைல்போன் வயிற்றுக்குள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர் அவரது வயிற்றுப் பக்கவாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மொபைல்போனை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அக்கைதி தற்போது நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.