காத்தான்குடி பிரதான வீதி, மீரா பாலிக்கா தேசிய பாடசாலை முன்பாக (17.05.2016) இன்று மதியம் 11.00 மணியளவில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகின. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்து வந்த 30 வயது மதிப்பிடத்தக்க நபர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் தற்போது காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியே மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகினது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




