கலாநிதி பதி காட்டிய முன்மாதிரிப்படி முஸ்லிம்கள் சகல கட்சிகளிலும் இருக்க வேண்டும்------------ கிருலப்பன மே தின விழாவில் அஸ்வர்

Written By avathani Media Network on Thursday, May 5, 2016


(எம்.எஸ்.எம்.சாஹிர்) 

முஸ்லிம்கள் ஒரே கட்சியில் இருக்கக் கூடாது. அப்போதுதான் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க முடியும். என முன்னாள் முஸ்லிம் சமய, கலாசார, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். 

கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டு எதிர்கட்சிகளின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு மேலும் பேசிய அல்ஹாஜ் அஸ்வர் கூறியதாவது, 

1956ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் முன்னணி உருவாக்கிய மகஜன எக்ஸத் பெரமுன எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க ஆரசியல் புரட்சியை ஏற்படுத்திய போது அந்தப் புரட்சிக்குத் துணையாக அந்த அணியில் இருந்த முஸ்லிம் தலைவர் கலாநிதி, டாக்டர் பதியுதீன் மஹ்மூத் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் ஒருக்காலும் மறந்து விட முடியாது. 

முஸ்லிம்கள் ஒரே கட்சியில் இருக்கக் கூடாது. பரந்து இருக்க வேண்டும். அப்போதுதான் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க முடியும். என்ற ஒரு வேணாவோடு, அரசியல் ஜானி பதியுதீன் மஹ்மூத், பண்டாரநாயக்க மூலமாக அளப்பரிய சேவைகளை இந்த நாட்டு முஸ்லிம்களுக்குச் செய்தார் என்பது வரலாறு. 

ஆகவே இன்று நடைபெறுகின்ற கூட்டமும் அதே ஒத்ததாக இருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில், வரலாற்றிலே முக்கியத்துவம் வாய்ந்த முõபெரும் மே தின தொழிலாளர் கூட்டத்திலே, கலந்து கொள்ள ஏராளமான முஸ்லிம்கள் வருகை தந்திருந்தனர். சிங்களப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் ஏராளமானோர் கூட கலந்து கொண்டதை காணக் கூடியதாக இருந்தது. அதே போன்று கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பெருந்திரளான முஸ்லிம்கள் வருகை தந்திருந்தார்கள். அது மட்டுமல்ல இப்போது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியிலே அரசியல் மனமாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. ஏனெனில் அவர்களில் விவசாயிகள் பெரும்பாலானவர்கள் கஷ்டப்படுகின்றார்கள். நெல்லை சந்தைப்படுத்த முடியாமல் மிகவும் சுகாதார முறையில் உருக்குலைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையைப் பார்க்கும் போது கிழக்கு மாகாணத்துக்கும் அவரை அழைத்து வருமாறு தொலைபேசி மூலம் எமக்கு என்நாளும் அழைப்பு விடுத்த வண்ணமுள்ளனர். எனவே சீக்கிரமாக நாங்கள் வருவோம். நீங்கள் ஆயத்தமாக இருங்கள் என்று சமாதானம் கூறி இருக்கின்றேன். 

பொது பல சேனா உருவாகித்தான் முஸ்லிம்களுக்கு கூறு விளைவித்தது என்று பரவலாக பிரசாரம் செய்யப்பட்டு, அது அரசியல் கூக்குரலாக எழுப்பப்பட்டு, அதன் மூலம் மஹிந்த அரசு கவிழ்க்கப்பட்டது. எனினும் இன்று அந்த கட்சியிலே இருக்கின்ற டிலான் பெரேரா பத்திரிகைக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். அதிலே அவர் குறிப்பிட்டு இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷாவோ, அவரைச் சாந்தவர்களோ பொதுபலசேனாவை உருவாக்கவில்லை. 

அளுத்கமை போன்ற இடங்களிலும் செய்த அநியாயங்கள், மற்ற இடங்களில் செய்த அநியாயங்கள் எல்லாம் வெளிநாட்டு கூட்டுச் சதிகார சக்திகள் தான் அவைகளை முடுக்கி விட்டிருக்கின்றது. அதன் மூலமாகத்தான் இந்த முஸ்லிம்களுடைய மனதை மாற்றி மஹிந்தவை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்கு ஏகாதிபத்தியவாதிகளுடையதும், வல்லரசுகளுடையதும் சூழ்ச்சிதான் அது. இவ்விடயம் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் டிலான் பெரேராவிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த உண்மையை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள். ஆகவே இதனை யார் செய்தார்கள்? எந்தக் கட்சியில் உள்ளவர்கள் செய்தார்கள்? ஏனெனில் ஏகாதிபத்திய வாதிகள் அடிவருடிகள் இங்கே இருக்கின்றார்கள். ஏராளமாக அவர்கள் ஆட்சியிலே இருக்கின்றார்கள். எனவே அவர்கள் யார் என்ற உண்மையை டிலான் பெரேரா அவர்கள் இந்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களுக்குச் சொல்ல வேண்டும். எதிர் காலத்தில் முஸ்லிம்களும் தலை தூக்கி இருக்கின்றார்கள். உண்மையை உணர்ந்திருக்கின்றார்கள். ஏனைய மக்களோடும் பொருளாதார ரீதியிலே பெரும் அவலத்துக்கு ஆளாகி இருக்கின்றார்கள். எனவே எதிர்காலத்தில் ஏராளமானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடைய எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதற்குத் தயாராக இருக்கின்றார்கள். என்ற நற் செய்தியை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். 

அதேபோன்றுதான் இந்த முறை 58 இலட்சம் கொடிகள் மஹிந்த ராஜபக்ஷவுக்காகத் தூக்கப்பட்டது. அடுத்த முறை அது 78 இலட்சமாக எழக் கூடிய விதத்தில் தற்போது ஏற்பட்டு வரும் நடவடிக்கைகளைக் காணக் கூடியதாக உள்ளது-- என்றார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.